தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை

எல்லாத் தமிழரும் அறிய வேண்டிய முதல் நூலான தொல்காப்பியத்தை ஒல்லும் வழியெல்லாம் எளிமைப்படுத்தும் முயற்சியில், அதன் முதல் இரண்டு இயல்களுக்குக் காலம், பதம் பார்த்து எழுதப்பட்ட உரைநூல்.

உரைநடையில் திருக்குறள்

திருவள்ளுவரின் எல்லாக் கருத்துக்களையும் எல்லாரும் எளிதில் அறிந்துகொள்ளுதற்குத் தெளிவான இந்த உரைநடைத் திருக்குறள் பெரிதும் துணைசெய்கிறது. வள்ளுவர் இன்றிருந்தால், உரைநடையில் குறள் எழுத நினைத்திருந்தால் அது இப்படித்தான் இருந்திருக்கும்.

கம்பர் நாற்பது

இளைய உள்ளங்களில் கம்பரின் பாடல் வித்துக்களைப் பதிய வைக்கும் நோக்கொடு, இராமாயணத்திலிருந்து எளிய நாற்பது பாடல்களைத் தெரிவுசெய்து, எளிய முறையில் உரைவகுத்துப் பள்ளி மாணவ மாணவியரையும்கூடக் கம்பனோடு உரையாட வைக்கும் உரைநூல்.

VSP Manickam