தலைவர்களுக்கு

“என் எழுத்தால் இந்தியத் தாய்நாட்டிற்கு ஒரு நன்மை செய்யமுடியும் என்றால், மொழிச்சிக்கலுக்கு முடிவான நிலையான நேர்மையான வழிகாட்ட இயலும் என்றால், அத்தொண்டினை ஏன் முன்வந்து செய்யலாகாது? எழுத வேண்டிய காலமும் பொருத்தமாக இருக்கும்போது, கடமை செய்வதைக் கழிக்கலாமா?” என்று தன் கடமையாற்றி, “இந்நூல் என் நாட்டுத் தொண்டு” என்று பதிவுசெய்த நூல்.

நீதி நூல்கள்

இளைஞர்களுக்கு உடல், உள்ளம், உயிர் பற்றிய நல்வழிக் கருத்துக்கள், நல்வாழ்வுக் கோட்பாடுகள் தமிழில் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளன என்பதை நீள நினைந்து எழுதப்பட்ட நூல். தமிழ் அறக் கோட்பாடுகளை வளரும் குழந்தைகள் நெஞ்சில் பதியவைக்கும் நூல்.

நகரத்தார் அறப்பட்டயங்கள்

நூற்றுக்கும் மேற்பட்ட பக்கம் கொண்ட இவ்வேடுகள் பாண்டியர், சோழர், மதுரை நாயக்கர், மருது பாண்டியர், தொண்டைமான் பற்றிய குறிப்புக்களை கொண்டிருப்பது வரலாற்றாசிரியர்களுக்குத் துணைசெய்யும். நானூறு ஆண்டுகளுக்கு முன் பேச்சுத் தமிழ்ப்படி எழுதப்பட்ட இவை மொழியாராய்சியாளர்க்கும் துணைசெய்யும்.

VSP Manickam