மனைவியின் உரிமை

ஐந்து நாடகங்களின் தொகுப்பு. முதலன மூன்றும் புறப்பொருள் சார்ந்தது. நான்காவது அகமும் புறமும் தழுவியது. இறுதியது அகப்பொருள் பற்றியது. சென்ற காலத் தமிழ் மொழியின் தூய்மை, வருங்காலத் தமிழ் மொழியின் செம்மை, நிகழ்காலத் தமிழ் மக்களின் மொழியறிவு என்ற மூன்றினையும் கருத்திற்கொண்டு, இலக்கிய நடையில் அமைந்த நாடகங்கள் இவை.

நெல்லிக் கனி

வாழ்வின் புறநலங்களைப் பெருக்கிக்கொள்வதற்காக நிலையான மனித உணர்வுகளைக் குறைக்கவும் திரிக்கவும் அழிக்கவும் முயல்கிறோம். பிறவிக்குரிய இயற்கை உணர்சிகளை, மழையை மண் ஏற்பதுபோல, ஏற்று நல்வழிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் வாழ்வு நெறி; அனைத்தையும் வாழ்விக்கும் நெறி. இதை நிலைநாட்ட எழுந்ததே இந்த நாடகம்.

உப்பங்கழி

இக்குடும்ப நாடகம் குடிச் சிக்கல்கள் என்ன, அவற்றை யார் யார் எத்துணையளவு தாங்கிக்கொள்கின்றனர், எம்முறையில் மெல்ல ஏற்று நல்ல வழி காண்கின்றனர், ஒருசிலரால் தாங்க முடியாமை ஏன்? என்ற வாழ்வியலைக் காட்டுகின்றது.

ஒருநொடியில்

‘தற்கொலை எண்ணம் எழுவதும் ஒரு நொடியில்; தற்கொலை செய்து தொங்குவதும் ஒரு நொடியில். அந்தப் பாழெண்ணம் மாறுவதும் ஒரு நொடியில். தற்கொலை எண்ணம் வந்தவுடன் ஒன்று செய்யுங்கள். உங்கள் எண்ணத்தை ஒரு நண்பரிடமோ பெரியவரிடமோ ஆசிரியரிடமோ வாய்விட்டுத் தெரிவித்துவிடுங்கள். உயிரோடு வாழ்வீர்கள்! உயர்வாக வாழ்வீர்கள்! உண்மையாக வாழ்வீர்கள்!’ என வாழ வழிகாட்டும் 10 நாடகங்களின் தொகுப்பு.

VSP Manickam